மட்டு பட்டிருப்பு கல்வி பணிப்பாளர் இடமாற்றத்தை இரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை இரத்து செய்ய கோரி பாடசாலை பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கனவயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (01.0502024) மட்டு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அலுவலக்தில் இடமாற்றம்
இந்நிலையில் வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிவந்த கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் மாகாண கல்வி அலுவலக்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றத்தை இரத்து செய்யகோரி பாடசாலைபழைய மாணவர்கள், பெற்றோர்கள், பட்டிருப்பு கல்வி வலயம் ஒன்றினைந்து கவனயீர்பு ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து இன்று காந்தி பூங்காவில் நூற்றுக்கு மேற்பட்டோர் ஒன்று திரண்டு கல்வி அமைச்சின் செயலாளரே நீதியான விசாரணை வேண்டும், எமது பிள்ளைகளின் கல்வியில் அக்கறையாக செயற்பட்ட வலயக் கல்வி பணிப்பாளர் எமக்கு வேண்டும், கல்வி பணிப்பாளரின் முறைகேடான இடமாற்றத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அளுநரே எமது கல்வி பணிப்பாளரை மீண்டும் நியமித்து தாருங்கள், ஒரு குழுவின் சுயநலத்திற்காக திறைமையான கல்வி பணிப்பாளரை இடமாற்றுவதா? , அரச அதிகாரிகள் மீதான அரசியல் பழிவாங்கலை உடன் நிறுத்து, எமது கல்வி கல்வி பணிப்பாளர் எமக்கு வேண்டும், போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு கல்வி பணிப்பாளரின் முகத்திரை கொண்ட முகமூடி அணிந்து காலை 10 மணி தொடக்கம் 11 மணிவரை சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம்..! 9 மணி நேரம் முன்
பூசத்தில் சுக்கிரன் பெயர்ச்சி - ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா? Manithan