மண்ணெண்ணெய் பெற்றுத்தரகோரி பொதுமக்கள் வீதியினை மறித்து ஆர்ப்பாட்டம்(Video)
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள எண்ணெய் நிரப்பு
நிலையத்தில் மண்ணெண்ணெய் இல்லை என கூறியதால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த எண்ணெய் நிரப்பு நிலையத்தில் இன்று(4) அதிகாலை முதல் மண்ணெண்ணெய் பெறுவதற்கு பல மணித்தியாலங்கள் காத்திருந்த பின் 3 மணியளவில் மண்ணெண்ணெய் வராது என்று தெரிவித்ததால் காத்திருந்த மக்கள் ஆத்திரமடைந்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் ஏன் தீவிரமடைந்தது?

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நபர் ஒருவர் பொலிஸாரை தள்ளிக்கொண்டு சென்றதனால் அங்கு அமைதியற்ற சூழல் உருவானது.
இதனால் நோர்வூட் மஸ்கெலியா, நோர்வூட் பொகவந்தலா ஊடான பொது போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.
நோர்வூட் பொலிஸார் நிலைமையினை சுமுகமான நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்த போதிலும் அது பயனளிக்கவில்லை.
மக்களின் ஆதங்கம்
“இன்று அதிகாலை முதல் மண்ணெண்ணெய் வரும் என்று தெரிவித்துவிட்டு இப்போது இல்லை எனக் கூறினால் நாங்கள் என்ன செய்வது, இந்த அரசாங்கமும் அதிகாரிகளும் மக்களை மாடுகள் என்று எண்ணியுள்ளார்களா? அல்லது மக்கள் படும் அவலம் இவர்களுக்கு தெரியவில்லையா” என மக்கள் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.
மேலும், “இன்று அரசாங்கம் என்று ஒன்றுமில்லை. அவர்கள் இன்று அனைத்தையும் பெற்றுக்கொண்டு மிகவும் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். வாக்களித்த மக்களின் வாழ்க்கை வீதிகளில் சீரழிகின்றன. நாளுக்கு நாள் பொருட்களின் விலையேற்றுகின்றனர். பொருட்களுக்காக பல மணித்தியாலங்கள் மக்களை காத்திருக்க வைக்கின்றனர்.

மலையகத்தில் இருந்து வாக்குகளை பெற்று சென்றவர்கள் மக்களின் பிரச்சனைகளை கண்டும் காணாதது போன்று வாய் மூடி மௌனமாக இருக்கின்றனர். இதற்கு மேலும் இவர்களுக்கு வாக்களிப்பார்களேயானால் நிச்சயம் அவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது.
நாட்டு மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை உணர்ந்து பொறுப்பு
வாய்ந்தவர்கள் சரியான தீர்வினை பெற்றுத்தர வேண்டியது அவர்களது கடமையாகும்.” என கருத்து தெரிவித்துள்ளனர்.
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri