இலங்கையில் ஏற்படும் மற்றொரு சிக்கல் நிலை
முட்டை, கோழி இறைச்சி, திரவப் பால் போன்றவற்றின் நுகர்வு படிப்படியாகக் குறைவடைந்துள்ள நிலையில், சத்துணவு தொடர்பில் இலங்கையில் மற்றுமொரு சிக்கல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் முட்டை, கோழி இறைச்சி மற்றும் திரவ பால் கொள்வனவு வெகுவாக குறைவடைந்து வருவதாக விவசாயத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வே இதற்கு காரணம் என அதன் செயலாளர் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்படப் போகும் மற்றுமொரு சிக்கல்
பொருளாதார நெருக்கடியினால், விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கை மக்கள் சத்துணவு தொடர்பான மற்றுமொரு சிக்கலை எதிர்நோக்கவுள்ளதாக எதிர்வுகூறல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் முடிந்தவரை குழந்தைகளின் போஷாக்கினை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் விஜேசூரியர் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.