கொரோனாவை பயன்படுத்தி சுரண்டும் பேய்கள்! சம்பிக்க ரணவக்க
தம்மிக்க பாணி, கஞ்சா பாணி ஆகியவற்றை அறிமுகப்படுத்திய நபர்களின் பொய் தற்போது அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் சம்பிக்க ரணவக்க இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இது தேசிய மருத்துவ துறைக்கு செய்த மிகப் பெரிய குற்றம்.
இரண்டு டொலர்களுக்கு குறைவான விலையில் கொரோனா ஊசி மருந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலைமையில், சீனா அல்ல ரஷ்யாவிடம் இருருந்து ஊசி மருந்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நெருக்கமான சுரண்டல் பேய்கள் மக்களிடம் பணத்தை சுரண்டி வருகின்றதாகவும் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri