இம்ரான் எம்.பி முன்வைத்த கோரிக்கைகள் - விரைவில் நடைமுறைப்படுத்துவதாக அதிகாரிகள் உறுதி

Trincomalee Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Imran Maharoof
By Kiyas Shafe Jul 17, 2026 06:02 AM GMT
Report

திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட கடலரிப்பு விவகாரம், இராணுவத்தின் வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல் மற்றும் விவசாயிகளின் வரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃருப் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று(16.07.2026) வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினரால் இப்பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடுமையான வீழ்ச்சிப் பாதையில் தேயிலை தொழில்துறை - நெருக்கடியில் சிக்கிய தொழிலாளர்கள்

கடுமையான வீழ்ச்சிப் பாதையில் தேயிலை தொழில்துறை - நெருக்கடியில் சிக்கிய தொழிலாளர்கள்

முன்வைக்கப்பட்ட பிரேரணைகள்

இதன்போது, சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளின் விபரங்கள் வருமாறு,

1. கிண்ணியா - உப்பாறு கரையோர கடலரிப்பை தடுக்க அவசர நடவடிக்கை "கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு வரையான கரையோரப் பகுதி மிக வேகமாக கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.

தற்போது இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீதியானது 3-வது வீதியாகும். இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட இரண்டு வீதிகள் ஏற்கனவே கடலரிப்பினால் முற்றாகச் சேதமடைந்து கடலுக்குள் மூழ்கிவிட்டன.

எனவே, தற்போதைய வீதியும் சேதமடைவதற்கு முன்னர், கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு பாலம் வரையான பகுதியில் கடலரிப்பைத் தடுப்பதற்கான நிரந்தரத் தடுப்புச் சுவரினை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இம்ரான் எம்.பி முன்வைத்த கோரிக்கைகள் - விரைவில் நடைமுறைப்படுத்துவதாக அதிகாரிகள் உறுதி | Demands Made By Imran Mp

2. சூரங்கல் இராணுவ முகாம் அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரிக்கை "கிண்ணியா சூரங்கல் பிரதான வீதியில் இரண்டு தனிநபர்களுக்கும், பள்ளிவாயலொன்றுக்கும் சொந்தமான 4 ஏக்கர் காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காணிகளுக்கு முன்னர் வாடகை செலுத்தப்பட்ட போதிலும், கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த காணியை இராணுவத் தேவைக்காகச் சுவீகரிப்பதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர் வாடகை செலுத்துவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, அந்த வர்த்தமானியினை இரத்துச் செய்து, காணியை அதன் உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அதற்குப் பதிலாகப் பொருத்தமான மாற்றுக்காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."

3. முத்துநகர் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு "நீண்டகாலமாக முத்துநகர் கிராமத்தில் குடியிருந்து, பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பல குடும்பங்கள் தற்பொழுது தங்குமிட வசதியின்றிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அந்தக் குடும்பங்கள் மீண்டும் சுமுகமாக வாழ்வதற்கு ஏதுவாக, அவர்களுக்குக் குடியிருப்பதற்காக மாற்று இடங்களில் காணிகளை வழங்குவதற்கு மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இம்ரான் எம்.பி முன்வைத்த கோரிக்கைகள் - விரைவில் நடைமுறைப்படுத்துவதாக அதிகாரிகள் உறுதி | Demands Made By Imran Mp

4. ஜெயந்திபுர விவசாயிகளுக்கு வரி செலுத்த கால அவகாசம் வழங்குக! "கந்தளாய் பிரதேச செயலக பிரிவின் ஜெயந்திபுர கிராம சேவகர் பிரிவில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் விவசாய நோக்கத்திற்காக 58 பேருக்குக் காணிகள் வழங்கப்பட்டிருந்தன.

எனினும், கடந்த சில வருடங்களாக அவர்கள் வரி செலுத்தவில்லை எனக் கூறி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான வட்டி மற்றும் வரிப்பணத்தை இம்மாத இறுதிக்குள் செலுத்துமாறு கந்தளாய் உதவி காணி ஆணையாளரினால் கடிதம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்தத் திடீர் உத்தரவு விவசாயிகளைப் பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

எனவே, இந்த ஏழை விவசாயிகள் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால எல்லையை நீடித்துக் கொடுப்பதோடு, நிலுவைகளைச் சலுகை மற்றும் சகாய அடிப்படையில் தவணை முறையில் செலுத்துவதற்கும் ஆவணம் செய்ய வேண்டும்."

இந்த கலந்துரையாடலில் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் கலந்துக் கொண்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃருபினால் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணைகள் தொடர்பில் ஆராய்ந்து தகுந்த தீர்வுகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.  

அரசியலில் குழி பறிக்கும் தந்திரம் - இளைஞர்களிடம் ரணில் விடுத்த கோரிக்கை

அரசியலில் குழி பறிக்கும் தந்திரம் - இளைஞர்களிடம் ரணில் விடுத்த கோரிக்கை

வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்


7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US