வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சிக்கல்களை விரைந்து தீர்த்து, அதனை எதிர்வரும் வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தும், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு முந்தைய ஆலோசனைகளை மேற்கொண்டும் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(16) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
ஓய்வூதியத் திட்டம்
நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறையாக விளங்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக முறையான ஓய்வூதியத் திட்டமொன்றின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு பணித்தார்.

சுற்றுலாத்துறை சார்ந்த திட்டங்களை மாவட்ட மட்டத்தில் செயற்திறனுடன் முன்னெடுக்க, நிதி ஒதுக்கீடுகளை நேரடியாக மாவட்ட செயலாளர்களிடம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து திட்டங்களை விரைவாகச் செயற்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கிரியா, கலேவெல மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன இணைந்து ஒரு பொதுவான திட்டத்தின் கீழ் செயற்படுத்துவதன் மூலம் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்த முடியும் என்றார்.
மத்திய கிழக்கில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையை 'சிவப்புக் கோடு' என்று அறிவித்த ஈரான்
ஜனாதிபதி பணிப்பு
திட்டங்களைச் செயல்படுத்துவதில் கொள்முதல் நடைமுறைகளால் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, ஜனவரி முதல் வாரத்திலேயே கொள்முதல் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு நிதி அமைச்சின் புதிய திட்டத்தைப் பின்பற்றுமாறு பணித்தார். அத்துடன், சுற்றுலா அமைச்சின் நிர்மாணத்துறை போன்ற விசேட கொள்முதல் தேவைகளை விரைவுபடுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

2030 ஆம் ஆண்டளவில் சுற்றுலாத்துறைக்குத் தேவைப்படும் 8 இலட்சம் மனித வளத் தேவையைப் பூர்த்தி செய்ய, ஹோட்டல் பாடசாலைகளின் பயிற்சிப் பாடநெறிகளை விரிவுபடுத்தவும், அமைச்சின் கீழ் உள்ள வளங்கள் மற்றும் காணிகள் குறித்த முறையான அறிக்கையைத் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
தூதரக சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் ஆசிய ஒளிபரப்பாளர்களின் மாநாடு உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.