இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் கோரிக்கை! வலு சேர்க்க திரட்டப்படும் கையொப்பங்கள்
இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என பரிந்துரைக்கும் ஐ.நா ஆணையாளரின் அறிக்கை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
கனடாவில் இயங்கும் 31 அமைப்புக்களை பிரிதி நிதித்துப்படுத்தும் 'கனடிய தமிழ் அமைப்புகளின் நீதிக்கான கூட்டமைப்பு' கனடிய அரசு, இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எனக் கோருகிறது.
மேற்படி கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வண்ணம் கனடா வாழ் தமிழ் மக்களின் ஒரு இலட்சம் கையொப்பங்களை திரட்ட இவ்வமைப்பு திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த வெள்ளிக் கிழமை இணையவழியாக நடைபெற்றுள்ளது.
முதல் கையெழுத்தை ஒன்றாரியோ மாகாண நடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி வைத்து தொடக்கி வைத்தார்.
அவர் தனது உரையில், “இது ஒரு மாபெரும் கையெழுத்து இயக்கமாக மாறி கனடிய அரசுக்கு பெரும் அழுத்தம் கொடுத்து தமிழினத்துக்கு நீதி கிடைக்க உந்துதாலாக அமைய வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
அத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளார்.
அவர் தனது உரையில், “இலங்கையில் தமிழினத்துக்கு நடைபெற்றது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பே! இதனை நிரூபிக்க அனைத்துலக விசாரணை வேண்டும். இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த பரிந்துரைக்கும் அண்மைய ஐ.நா ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கிறேன்.
2015இல் இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என 30 இலட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துகளை திரட்டி விடுதலைச் சிறுத்ததைகள் சார்பில் ஐ.நாவுக்கு அனுப்பியிருந்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “நான் மட்டும் அல்ல எங்கள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். இந்த கருத்தை ஆதரிக்க கூடிய பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்களையும் இணைந்து இந்திய அரசு இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற ஐ.நா ஆணையாளரின் அறிக்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஒரு வலுவான அழுத்தம் நாடாளுமன்றில் கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், www.ctcja.com என்ற இணையத்தளத்துக்கு சென்று கையொப்பத்தை பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
