பொய் தகவல்களை வழங்கி மோசடி செய்யும் அரசாங்கம்! உடன் நாட்டை முடக்குமாறு கோரிக்கை
அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்காது நாட்டை முடக்குமாறு அரசாங்க தாதி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரட்னபிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் ரீதியான தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கக் கூடாது எனவும், விஞ்ஞானபூர்மாக சிந்தித்த நாட்டை முடக்கினால் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கத்திற்கு இன்னமும் எத்தனை சடலங்கள் தேவைப்படுகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நோயாளர்களின் எண்ணிக்கை பற்றிய பொய்த் தகவல்களை வழங்கி புள்ளி விபரத் தகவல்களில் மோசடி செய்யும் அரசாங்கம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மெய்யாகவே கரிசனை காட்டுமா என்பது சந்தேகமே என அவர் தெரிவித்துள்ளார்.
புஞ்சி பொரளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
