ஐரோப்பாவில் இருந்து சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருமாறு கோரிக்கை
தென்னிலங்கைக்கு ரஷ்ய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்துள்ள போதிலும், அவர்கள் மிகக் குறைந்த பணத்தையே செலவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க அரசாங்கம் தலையிட வேண்டுமென உனவட்டுன சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுமித் உகேசிறி தெரிவித்துள்ளார்.
உனவட்டுனபிரதேசத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுவரை, உனவட்டுன பகுதியில் உள்ள ஹோட்டல்கள் ரஷ்ய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளன. ஆனால் அவர்கள் செலவு செய்வது மிகக் குறைவாக உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதில்லை. ரஷ்ய சுற்றுலா பயணிகள் கடற்கரைகளில் இருந்தால் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு கூட வருவதில்லை.
இந்த நாட்டுக்கு வரும்போது ஐரோப்பிய நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளன. நீங்கள் இந்த நாட்டிற்கு வருகிறீர்கள் என்றால், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளது.
50 வயதுக்கு மேற்பட்ட ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் இலங்கைக்கு வருகிறார்கள். அவர்கள்தான் அதிகப் பணத்தைச் செலவிடுகிறார்கள். எனவே மேற்கத்திய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.
டொலரின் விலை குறைந்ததால், சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஓரளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வங்கிகள் வாங்கிய கடன் தற்போது இருமடங்காகவும், மூன்று மடங்காகவும் அதிகரித்துள்ளது.
எங்களுக்கு நிவாரணம் இல்லை. மின் கட்டணம் அதிகரிப்பு மற்றும் இறக்குமதி பொருட்கள் வரம்பு ஆகியவை சுற்றுலாத்துறையை கடுமையாக பாதித்துள்ளது.
இதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வரம்புகளை தளர்த்த வேண்டும். இல்லையெனில், அந்த பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        