கோட்டாபயவை கைது செய்யுமாறு 15 பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை கைது செய்யுமாறு 15 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோட்டாபயவை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டுமென பிரித்தானியாவின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் இட் டேவி உள்ளிட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
கோட்டாபயவை கைது செய்யுமாறு கோரிக்கை

ராஜபக்ச இலங்கையை விட்டு தப்பிச் சென்றமை குறித்து கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, கோட்டாபயவை கைது செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிற் கட்சிகளும் ஆதரவினை வெளியிட்டுள்ளன.
கோட்டாபய ஒரு லட்சம் தமிழர்களை கொன்றதாக சில பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன் போது குற்றம் சுமத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு கருத்தையும் பிரித்தானிய நீதித்துறை அமைச்சர் அமென்டா எலிஸ் வெளியிட மறுத்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan