எரிபொருள் விநியோகத்தில் முறையான பொறிமுறை வேண்டும் என மக்கள் கோரிக்கை
அம்பாறை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல்வேறு எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதுடன் எரிபொருள் உரிமையாளருக்கும், பொதுமக்களுக்கும் முறுகல் நிலையும் ஏற்படுவதை பரவலாக அவதானிக்க முடிகின்றது.
இங்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள போதிலும் மக்கள் பொறுமையை கடைப்பிடிக்காமையினால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
இங்குள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சுமார் 5 தொடக்கம் 10 நாட்களுக்குப் பின்னர் மண்ணெண்ணெய் விநியோகிக்கபடுவதுடன் இங்கு ஒருவருக்கு 300 முதல் 500 ரூபாய்க்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது.
பொதுமக்கள் நீண்ட வரிசை
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அசௌகரியங்களுக்கு மத்தியில் மண்ணெண்ணெய்யை கொள்வனவு செய்ததையும் அவதானிக்க முடிந்தது. இது தவிர கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு எரிபொருள் வழங்கப்படாமையினால் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் சிக்கல்களை எதிர்கொண்டு வந்ததை அடுத்து ஒரு வாரத்தின் பின்னர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து அவர் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதனை அடுத்து அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களைப் பணித்ததற்கமைய இங்குள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸாருக்கு பெட்ரோல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இம் மாவட்டத்தில் எவ்வித தங்குதடையுமின்றி அரச உத்தியோகத்தர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டு வருகின்றது.
மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் பிரதேச செயலக ரீதியாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பிரதேச செயலாளர்களினால் அட்டைகள் வழங்கப்பட்டு குறித்த அட்டைகளுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்படுகின்றது.
இதனால் இங்குள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பலவேறு அரச திணைக்களங்களிலும் கடமை புரியும் உத்தியோகத்தார்கள் மிக நீண்ட வரிசைகளில் நின்று பெட்ரோலைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மேலும் இங்குள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுடான டீசல் விநியோகமும் மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரத்தில் மிக நீண்ட வரிசையில் வாகனங்களுடன் மக்கள் காத்து நின்று டீசலைப் பெற்றுக்கொண்டனர்.
அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெட்ரோலை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்து பொது மக்கள் சிலர் நேற்று (24) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு வந்த அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் பெட்ரோலை பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனை பொது மக்களுக்கு விநியோகிக்குமாறும் கூறினர்.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவிப்பு |
தொடரும் எரிபொருள் நெருக்கடி
[HEBNMG
பின்னர் உரிமையாளருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு சீராக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதுடன் மக்கள் நீண்ட வரிசைகளில் பல மணி நேரமாக காத்திருந்து எரிபொருட்களை பெற்று செல்கின்றனர்.
கல்முனை சாய்ந்தமருது நற்பிட்டிமுனை மருதமுனை கல்முனை பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறிப்பிட்ட எரிபொருட்கள் விநியோகிக்கப்படும் என பொட்ரோலிய கூட்டுத்தாபனம் முன்கூட்டியே அறிவித்து வருகின்ற நிலையில் அதிகாலை 3 மணி தொடக்கம் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கின்றனர்.
அதன் போது அனைவருக்கும் எரிபொருட்களை பகிர்ந்தளிக்கும் முகமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 1000 முதல் 2000 ரூபாய்க்கே எரிபொருட்கள் வழங்கி வைக்கப்படுகின்றது. அதனால் பல மணி நேர காத்திருப்பின் பின்னரும் மக்களுக்கு 2 முதல் 3 லீட்டர் வரையான எரிபொருட்களே பெற முடிந்துள்ளதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இது தவிர வேளாண்மை அறுவடை விவசாயிகள் மற்றும் கடற்தொழிலார்களும் எரிபொருட்களை சீராக பெற்றுக்கொள்ள சிரமப்படுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
