துறைமுக உயரதிகாரிகளின் வேதனத்தினை குறைக்குமாறு கோரிக்கை
துறைமுக பணிப்பாளர் சபை உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் சம்பளத்தில் குறைப்பு செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா துறைமுக தொழிற்சங்கங்களை முதற்தடவையாக நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாடியிருந்தார்.
இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமல்,
இலங்கையில் தற்போது மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் துறைமுக ஊழியர்களும் கரிசனை கொண்டு செயலாற்ற வேண்டும்.
அத்துடன் பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் குறைப்பு செய்ய வேண்டியேற்படும். அதனை புரிந்து கொண்டு ஊழியர்கள் செயலாற்ற முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri