தேசிய அனர்த்த நிலையை பிரகடனம் செய்யுமாறு கோரிக்கை
தேசிய அனர்த்த நிலையை பிரகடனம் செய்யுமாறு இலங்கை நிர்வாக சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு உரிய அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதில் சிக்கல்
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் நிலைமைகளை சாதாரண முகாமைத்துவம் செய்வதில் சிக்கல் நிலை காணப்படுவதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக உயிர் அச்சுறுத்தல்களை கருத்திற் கொள்ளாது பணியாற்றி வரும் அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் நெருக்குதல்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்யாமை குறித்து எதிர்ப்பை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களை குறைக்குமாறு அரசாங்கத்திற்கு ஆலோசனை |
கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள்
அத்துடன், மாத்தறை பிரதேச செயலாளருக்கு நெருக்கடி ஏற்படுத்திய மாத்தறை வைத்தியசாலையின் பணியாளர்களுக்கு மற்றும் வடமத்திய மாகாண ஆளுநரின் செயலாளரது பணிகளுக்கு இடையூறு விளைவித்த குருணாகல் மாநகர முதல்வர் ஆகியோருக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட நேரிடும் என இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது.