இலங்கையில் டெல்டா வைரஸ் கொத்தணி - கிராமம் ஒன்றில் 179 பேருக்கு தொற்று?
இலங்கையில் மேலும் இரண்டு பேர் டெல்டா மாறுபாடுடைய கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் தொம்பே பிரதேச செயலக பிரதேசத்தின் கிரிந்திவெல ஹித்எல்ல திவானகந்த பிரதேசத்தை சேர்ந்த கடற்படை அதிகாரியாகும்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மற்றைய நபர் உறுதி செய்யப்பட்டுள்ளார். எனினும் அவர் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்தியர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
எனினும் டெல்டா தொற்றுக்குள்ளான கடற்படை அதிகாரி புஸ்ஸ கடற்படை முகாமில் இருந்து கடந்த 26ஆம் திகதி தனது வீட்டிற்கு சென்று 28ஆம் திகதி மீண்டும் முகாமிற்கு சென்றுள்ளார்.
இந்த கடற்படை அதிகாரியின் கிராமத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான 179 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த அனைவரும் டெல்டா தொற்றுக்குள்ளாகியுள்ளார்களா என ஆராய்ந்து பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் டெல்டா தொற்றுக்கு உள்ளாகியிருந்தால் பாரிய டெல்டா கொத்தனி ஒன்று உருவாகும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
டெல்டா மாறுபாடினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த இருவரையும் சேர்த்து நாட்டில் 21 டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
