கொழும்பில் பல இடங்களில் ஆபத்தான வைரஸ் - அதிகளவான தொற்றாளர்களும் கண்டுபிடிப்பு
கொழும்பில் டெல்டா கொவிட் மாறுபாடினால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு 02, 05, 09, 10, 14 ஆகிய பிரதேசங்களிலேயே இந்த டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 19 பேர் டெல்டா கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைத்த அறிக்கை தொடர்பில் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் ஆய்வு நடத்துகின்றது. எனினும் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தொடர்பில் அறிவிப்பதில் சிக்கல்கள் உள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முதல் முறையாக தெமட்டகொட பிரதேசத்தில் கடந்த மாதம் 17ஆம் திகதி டெல்டா கொவிட் தொற்றாளர்கள் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டனர். அதன் பின்னர் டெல்டா தொற்றுக்குள்ளாகிய 14 பேர் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.
இலங்கையில் டெல்டா மாறுப்பாடு அதிகம் தொற்றியுள்ளதாக என ஆராய பரவலான PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
