அரசியல் தலையீடுகளின்றிய பொலிஸாரின் சுயாதீன செயற்பாட்டுக்கு நடவடிக்கை
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், அரசியல் தலையீடுகள் இன்றி பொலிஸார் சுயாதீனமாக செயற்படுவதை உறுதி செய்வதற்கும் விரைவான நடவடிக்கைகளை நடைமுறைபடுத்த எதிர்பார்ப்பதாக புதிய பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சராக ஹேரத் இன்று (25) உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.
இந்தநிலையில், தற்போது அமைச்சு எதிர்நோக்கும் மிக அழுத்தமான பிரச்சினை கடவுச்சீட்டுகளை வழங்குவதாகும் என்று அவர் கூறினார்.
கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காண ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அத்துடன் கடவுச்சீட்டு வரிசைகளை முடிந்தவரை அகற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மாற்று முறைகள்
புதிய கடவுச்சீட்டு முறை ஒக்டோபர் 15 மற்றும் 20இற்குள் அறிமுகப்படுத்தப்படும். அதற்குள் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாற்று முறைகளுக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கை குறைந்து வருவதை ஒப்புக்கொண்ட ஹேரத், அந்த நம்பிக்கையை மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைபடுத்துவதில் இதற்கு முன்னர் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அவற்றை நிவர்த்தி செய்யுமாறு உயர் பொலிஸ் அதிகாரிகளை அமைச்சர் வலியுறுத்தினார்.
சட்ட ஒழுங்கு
சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துவதில் அதிகாரிகள் சுதந்திரமாக செயற்பட முடியும்.
அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்ற வகையில் தமது அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளிப்பதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாரபட்சமின்றி, சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டிய பொறுப்பு, பொலிஸாருக்கு உள்ளது. அரசாங்கத்துடன் நெருக்கமானவர்கள் தவறு செய்திருந்தாலும், சட்டம் அனைவருக்கும் சமமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
