இலங்கை - இந்தியாவிற்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு
இலங்கை - இந்தியாவிற்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் இருதரப்பு ஈடுபாட்டிற்கான புதிய மார்க்கங்கள் குறித்து இந்தியா - இலங்கை இடையிலான 7 ஆவது வருடாந்த பாதுகாப்பு மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை இடையிலான 7 ஆவது வருடாந்த பாதுகாப்பு மாநாடு 2023 பெப்ரவரி 23-25 திகதிகளில் புதுடில்லியில் நடைபெற்றுள்ளது.

பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள்
இந்த மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னே, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் எஸ்.கே.பத்திரண, இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையைச் செர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள், பொதுவான பாதுகாப்பு சவால்கள் மற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR) என்ற இலக்கினை உறுதி செய்வதற்கான நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் பாதுகாப்பு குறித்த பேச்சுகளே வருடாந்த பாதுகாப்பு மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam