நாடாளுமன்ற ஜனநாயகத்தை சண்டியர்களிடம் இருந்து பாதுகாத்து தாருங்கள் - ஐ.மக்கள் சக்தி
நாடாளுமன்ற ஜனநாயகத்தை சண்டியர்களிடம் இருந்து பாதுகாத்து தரும் வரையில் நாடாளுமன்ற விவாதங்களை புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இன்று மதியம் மனுஷ நாணயக்கார மற்றும் ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுஷ நாணயக்காரவை தாக்க முயற்சித்தனர். அப்போது மனுஷ நாணயக்கார, சபாநாயகர் வெளியேறும் வழியாக சபையில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதன் பின்னர் உடனடியாக கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, சண்டியர்களிடம் இருந்து தமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தை புறக்கணிப்பது என தீர்மானித்துள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
