இஸ்ரேலில் அரசியல் குழப்பம்! முக்கிய அமைச்சரின் பதவியை பறித்த நெதன்யாகு
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெலண்ட் (Yoav Gallant) தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக யோவ் கெலண்ட் மீது நெதன்யாகு வைத்திருந்த நம்பிக்கையில் விரிசல் ஏற்பட்டமையே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தற்போது வெளிவிவகார அமைச்சராக உள்ள இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) பாதுகாப்பு அமைச்சையும் நிர்வகிப்பார் என கூறப்படுகின்றது.
வெளியான கணிப்பு
குறித்த தீர்மானத்திற்கு தனது 'X' தளத்தில் பதிலளித்த கெலண்ட், "இஸ்ரேலின் பாதுகாப்பு என்னுடைய வாழ்நாள் இலக்கு" எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நெதன்யாகு, கெலண்ட்டை பதவி நீக்கம் செய்து தனது அரசியல் கூட்டணியில் இருந்து ஒருவரை அப்பதவிக்கு நியமிப்பார் என இஸ்ரேலின் அரசியல் வட்டாரங்கள் கணித்திருந்தன.

சரிவு நிலையில் உள்ள தனது ஆளும் அரசாங்கத்தை மீட்டெடுக்க நெதன்யாகு போராடி வருவதாகவும் இஸ்ரேலிய அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 19 மணி நேரம் முன்
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam