குறைபாடுகளுடன் இயங்கும் திருகோணமலை வைத்தியசாலை: கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு
திருகோணமலை (Trincomalee) மாவட்ட பொது வைத்தியசாலை பல குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இன்று (06.05.2024) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) மக்களின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சிற்கு தெரியப்படுத்தியிருந்தார்.
சுகாதார ஊழியர்களின் குறைபாடுகள்
அது தொடர்பில் ஆராய இன்று விஜயம் ஒன்றை நாம் மேற்கொண்டு வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுடன் கலந்துரையாடியுள்ளோம்.

சுகாதார ஊழியர்களின் குறைபாடுகள் காரணமாக வைத்திய நிபுணர்கள் தங்கள் கடமைகளை சரியாக மேற்கொள்ள முடியாமல் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பிரச்சினைகளுக்கான தீர்வு
சுமார் 100 ஊழியர்களின் பற்றாக்குறை நிலவுவதுடன் தாதியர்களுக்கான பற்றாக்குறையும் கணிசமான அளவு நிலவுகிறது. இந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்து கொடுக்கப்பட வேண்டும்.
இருதய நோய்க்கான கட்டிடமும் இங்கு இன்மையால் நோயாளிகள் வெளிமாவட்டங்களுக்கு சென்று சிகிச்சை பெறவேண்டியுள்ளது.

வைத்தியசாலைக்கான விடுதிகளில் சீராக மின்விசிறி கூட இயங்குவதில்லை என்பதோடு குடிநீர் கூட பல பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகிறது.
இந்த பிரச்சினைகள் சீர் செய்யப்பட்டு திறம்பட சேவைகளை வழங்க வேண்டும். எதிர்வரும் வாரமளவில் இது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் பேசி பிரச்சினைகளை தீர்க்க முழு முயற்சிகளையும் மேற்கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam