புதிய கட்சியில் இருந்து விலகிய முக்கிய அரசியல் பிரமுகர்
முன்னணி வர்த்தகர் திலித் ஜயவீரவின் மௌபிம ஜனதா கட்சியின் முக்கிய உறுப்பினரான முன்னாள் நிதியமைச்சர் சரத் அமுனுகம(Sarath Amunugama) அந்தக் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சரத் அமுனுகம, தான் பதவி விலகுவதற்கான தீர்மானத்தை ஜயவீரவிடம ஏற்கனவே அறிவித்துள்ளார். எனினும் அவர் தமது பதவி விலகலுக்கான சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
புதிய அரசியல் கூட்டணி
இந்தநிலையில் ஜயவீர நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில மற்றும் இன்னும் சில சிறிய அரசியல் கட்சி தலைவர்களுடன் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கினார்.
இந்தக் கூடடணிக்கு ‘சர்வஜன பலய’ என்ற பெயர் சூட்டப்பட்டு உடன்படிக்கைகளும் செய்து கொள்ளப்பட்டுள்ளன.
இந்த உடன்படிக்கைகளில் தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமயவின் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வாசுதேவ நாணயக்கார, கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி வீரசிங்க, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கெவிந்து குமாரதுங்க,மௌபிம ஜனதா கட்சியின் சன்ன ஜயசுமன மற்றும் திலித் ஜயவீர ஆகியோர் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |