அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் பணிப்பாளர் கேதீஸ்வரன் சான்றுரை

Jaffna Law and Order Ramanathan Archchuna
By Theepan Mar 28, 2026 03:42 PM GMT
Report

யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ முனைவர் கேதீஸ்வரனால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை (27.03.2026) அன்று பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏறத்தாழ இரண்டு மணிநேரத்திற்கும் மேலாகப் பணிப்பாளர் கேதீஸ்வரன் சான்றுரைத்துள்ளார்.

கார்க் தீவில் அமெரிக்க இராணுவத்திற்கு காத்திருக்கும் பேராபத்து - ட்ரம்பிற்கு ஈரான் புகட்டப்போகும் வரலாற்றுப் பாடம்

கார்க் தீவில் அமெரிக்க இராணுவத்திற்கு காத்திருக்கும் பேராபத்து - ட்ரம்பிற்கு ஈரான் புகட்டப்போகும் வரலாற்றுப் பாடம்

 அவதூறு வழக்கு

கடந்த 04.07.2024 அன்று சாவகச்சேரி அடிப்படை மருத்துவமனையின் மருத்துவ அத்தியேட்சகராக மருத்துவர் அர்ச்சுனா பணியாற்றிய போது, யாழ்ப்பாண மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் வலி நிவாரணிகளை போதை மருந்துகளாக மருந்தகங்கள் வழியாகப் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு விற்பதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்.

அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் பணிப்பாளர் கேதீஸ்வரன் சான்றுரை | Defamation Case Against Archuna

இந்தக் கூற்றுத் தொடர்பிலேயே இந்த அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் முன்னாய்வின் போது, அந்த குறிப்பிட்ட காணொளி தன்னால் தான் பதிவேற்றம் செய்யப்பட்டதையும், அச்செய்தி தன்னால் தான் கூறப்பட்டதையும் அர்ச்சுனா ஏற்றுக்கொண்டிருந்தார்.

உலகளாவிய எண்ணெயின் உயிர்நாடியான செங்கடலும் ஆபத்தில்! தீவிரமடையும் மத்திய கிழக்கின் போர்களம்

உலகளாவிய எண்ணெயின் உயிர்நாடியான செங்கடலும் ஆபத்தில்! தீவிரமடையும் மத்திய கிழக்கின் போர்களம்

காணொளி

மேலும், அந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை நீதிமன்றத்தில் மெய்ப்பிப்பார் எனத் தமது மறுமொழியிலும் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (27.03.2026) சான்றுரைத்த மருத்துவர் கேதீஸ்வரன், தமது பணிக்காலத்தில் வலி நிவாரணிகளை மருத்துவச் சீட்டு இல்லாமல் வழங்கப்படுவது தொடர்பாக வந்த குற்றச்சாட்டுகள் குறித்தும், அது தொடர்பில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுக்கு இடையில் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையொன்றின் மூலம் நீதிமன்றத்தில் சான்றுகளுடன் சமர்ப்பித்தார்.

அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் பணிப்பாளர் கேதீஸ்வரன் சான்றுரை | Defamation Case Against Archuna

இது தொடர்பாக மருந்தகங்கள், அரச மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவ நிலையங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சான்றுகளின் அடிப்படையில் தமது கருத்துகளை முன்வைத்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது மருத்துவர் அர்ச்சுனாவினால் வெளியிடப்பட்ட காணொளி நீதிமன்றத்தில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.அக்காணொளி திரையிடப்பட்ட போது மருத்துவர் அர்ச்சுனாவும் நேரடியாக மன்றத்தில் உடனிருந்தார்.

அமெரிக்கக் கப்பலைத் தாக்கிய IRGC- வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஓமன் கடற்கரைக்கு அப்பால் பதற்றம்

அமெரிக்கக் கப்பலைத் தாக்கிய IRGC- வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஓமன் கடற்கரைக்கு அப்பால் பதற்றம்

 35 ஆண்டுகால மருத்துவச் சேவை

மேலும் சான்றுரைத்த பணிப்பாளர் கேதீஸ்வரன், தமது 35 ஆண்டுகால மருத்துவச் சேவையில் தம்மீது எவ்வித இழுக்கும் ஏற்பட்டிருக்காத நிலையில், மிகவும் பொய்யாக முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டானது தம்மைப் பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக இந்தக் காணொளியை அர்ச்சுனா வெளியிட்டதன் பின்னர், வெளிநாடுகளிலிருந்து பலர் தம்மை அச்சுறுத்தியதோடு, தமது குடும்பத்தினரையும் மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் சான்றுரைத்தார்.

அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் பணிப்பாளர் கேதீஸ்வரன் சான்றுரை | Defamation Case Against Archuna

பணிப்பாளர் மருத்துவ முனைவர் கேதீஸ்வரன், அடுத்த அமர்வின் போது மருத்துவர் அர்ச்சுனாவின் வழக்கறிஞரால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.

பணிப்பாளர் கேதீஸ்வரன் சார்பில் சட்டத்தரணிகளான க. குமணன், த. தினேசு, சி. அபினாஸ் ஆகியோரின் துணையுடன் சட்டத்தரணி கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகியிருந்தார்.

மருத்துவர் அர்ச்சுனா சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனின் அறிவுறுத்தலில் மூத்த சட்டத்தரணி சி. கனகசிங்கம் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US