அமெரிக்கக் கப்பலைத் தாக்கிய IRGC- வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஓமன் கடற்கரைக்கு அப்பால் பதற்றம்
ஓமான் கடற்கரைக்கு அப்பால் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியதாக ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது.
ஐஆர்ஜிசி–வின் Khatam al-Anbiya headquarters தலைமையகத்தின் ஒரு செய்தியாளர், “ஓமான் நாட்டின் சலாலா துறைமுகத்திலிருந்து கணிசமான தூரத்தில் அமெரிக்க ராணுவ ஆதரவு கப்பலை ஈரான் படைகள் இலக்கு வைத்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிவைக்கப்பட்ட கப்பல்
பகுதியளவில் அங்கீகரிக்கப்பட்ட Tasnim News Agency செய்தியாளர் வெளியிட்ட அறிக்கையில், “முன்னதாக அறிவித்தபடி, சகோதர மற்றும் நட்பு நாடான ஓமானின் தேசிய இறையாண்மையை ஈரான் இஸ்லாமியக் குடியரசு மதிக்கிறது” என்றும் கூறப்பட்டது.

இதேவேளை, யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்(USS George HW Bush )எனப்படும் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பல், 80-க்கும் மேற்பட்ட விமானங்களை ஏற்றிச் செல்லக்கூடிய கப்பலொன்று மத்திய கிழக்கை நோக்கி செல்கின்றது.