அரசியல் பிளவுகளால் சிதறும் தமிழ் புலம்பெயர் குழுக்கள்!
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஏறக்குறைய 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த காலகட்டத்தில் பெரும்பான்மையான சிங்களவர்களுக்கும் தமிழ் சிறுபான்மையினருக்கும் இடையில் அரசியல் பிளவுகள் தோன்றியுள்ளதாக தெ டிப்ளொமெட் என்ற ஆசிய பசுபிக் அரசியல் நிலவரங்களை ஆராயும் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
அரசியல் பிளவுகள்
அத்துடன் நீண்ட காலமாக இலங்கை அரசாங்கம் செய்த போர்க்குற்றங்களுக்காக நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரி வரும் தமிழ் புலம்பெயர் குழுக்களிடையேயும் அரசியல் பிளவுகள் ஆழமாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்ததாக கூறி இலங்கை அரசாங்கத்தால் தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டிருந்த, ஒரு காலத்தில் அதிகாரம் பெற்ற தமிழ் குடை அமைப்பான உலக தமிழர் பேரவை, பௌத்த தூதுக்குழுவுடன் இணைந்து வெளியிட்ட இமாலய பிரகடனம் இந்த பிளவை அதிகரித்துள்ளதாக டிப்ளொமெட் சுட்டிக்காட்டியுள்ளது.
ரணில் வழங்கியுள்ள உறுதி
இது தமிழ் மக்கள் மத்தியிலும் பதற்றதை தோற்றுவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த பிரகடனம் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆவணத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பல நடவடிக்கைகளை பரிசீலிப்பதாக அவரும் உறுதியளித்துள்ளார். பிரகடனம் எளிமையானது மற்றும் ஆறு கருப்பொருட்களை பகுதிகளை உள்ளடக்கியது.
இருப்பினும், பிரச்சினைகளின் மிகவும் சர்ச்சைக்குரிய முக்கிய பகுதிகள் அதில் சேர்க்கப்படாமை, குறித்த பிரகடனம், தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற உந்துதல் பெற்ற அரசியல் சூழ்ச்சி என்று பலரும் விமர்சனம் வெளியிட்டுள்ளதாக டிப்ளொமெட் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
