மன்னாரில் சடுதியாக குறைந்துள்ள கோழி இறைச்சியின் விலை
மன்னார் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நாடளாவிய ரீதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக மீன் மற்றும் மரக்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இறைச்சி கோழி மற்றும் முட்டை கோழி விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விற்பனை விலை
குறிப்பாக ஒரு கிலோ இறைச்சிக் கோழி 1360 ரூபாவாகவும் முட்டை கோழி கிலோ 1100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

எனினும், இறைச்சி கோழிக்கான விற்பனை விலை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படாத நிலையில் ஏனைய மாவட்டங்களில் 1450 ரூபா தொ்டக்கம் 1500 ரூபா வரையில் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri