நுவரெலியாவில் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு
நுவரெலியா(Nuwara Eliya) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலந்த பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து இன்று (13) சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.
மேலதிக விசரணை
சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் முழுவதும் சிதைவுண்ட நிலையில் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பதில் நீதவான் ஜயமினி அம்பகஹவத்த விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாயைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் உதவியுடனும் இப்பகுதியில் உள்ள பிரதேச தாதியர்களின் உதவியுடன் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசரணையை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பல்லவன்-பாண்டியன் கதறி அழுது நிலாவிடம் வைக்கும் வேண்டுகோள், அவரின் முடிவு என்ன?.. அய்யனார் துணை சீரியல் Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
