கொழும்பு புறநகர் பகுதியில் சிறுமி ஒருவர் மீது கொடூர தாக்குதல்
கொழும்பு(Colombo) - மீகொட பகுதியில் ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று(13.06.2024) இடம்பெற்றுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவ அதிகாரி என்பதுடன் அவர் சிறுமியின் மாற்றாந்தந்தை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சிறுமி சந்தேக நபரின் பகையாளர்களுடன் உரையாடியமையை மறைத்தமையால் சிறுமி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மீகொட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அண்மையில் முல்லைத்தீவு(Mullaitivu) – மணலாறு (வெலிஓயா) பகுதியிலுள்ள வீடொன்றில் 04 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam