அவசரகாலச்சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளமை மக்களின் ஜனநாயக குரலை ஒடுக்கும் செயல்: இரா.துரைரெத்தினம்
மக்கள் வீதிக்கு இறங்கிய நிலையில் ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தைக் குறிப்பிட்ட காலங்கள் வரையும் பிரகடனப்படுத்தி உள்ளது என்பது மக்களின் ஜனநாயக குரலை ஒடுக்குவதோடு, பொலிஸாரின் தன்னிச்சையான போக்குக்களையும், அரசபடையின் கண் மூடித்தனமான செயற்பாடுகளையும் ஜனாதிபதியின் சர்வதிகார ஆட்சியையும் திணிக்கும் செயலே என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப்(ப.ம) இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதியையும், பிரதமர் உட்பட குடும்பத்தார் அனைவரையும் இராஜினாமா செய்யுங்கள் என ஒருமாத காலமாக ஜனநாயக முறைப்படி எந்தவித வன்முறையும் இல்லாமல் மனித உரிமை எதையும் மீறாமல் நாடு பூராகவும் வெகுசன ரீதியான போராட்டங்களை மூவின சமூகங்களும் தனிநபராகவும், அமைப்பு ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் நடாத்தி வருவது நாம் அனைவரும் அறிந்த விடயமே.
ஒரு மாதகாலமாகியும் மக்களின் துன்ப துயரங்களுக்கு ஒரு முடிவின்றி மக்கள் பரிதவிக்கின்ற நிலையில், மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணுவதற்கு ஆட்சியாளர்கள் தவறு விட்டமை காரணமாக ஆட்சியாளர்கள் ஒதுங்கி மக்களின் துயர்களைத் துடைக்கக் கூடியவர்களின் கையில் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வழி விடுமாறு மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தைக் குறிப்பிட்ட காலங்கள் வரையும் பிரகடனப்படுத்தி உள்ளது என்பது மக்களின் ஜனநாயக குரலை ஒடுக்குவதோடு, பொலிஸாரின் தன்னிச்சையான போக்குக்களையும், அரசபடையின் கண் மூடித்தனமான செயற்பாடுகளையும் ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்சியையும் திணிக்கும் செயலே'' என குறிப்பிட்டுள்ளார்.
இதை தடுத்து நிறுத்த மக்கள் அணிதிரளாத பட்சத்தில் வீடுவீடாகச் சென்று
காணாமலாக்கப்படுகின்ற சம்பவங்கள் தொடரும். எனவே இதைத் தடுத்து நிறுத்த மக்கள்
அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 13 மணி நேரம் முன்

கமலை தொடர்ந்து Comeback கொடுத்த இயக்குநர் ஹரி ! யானை திரைப்படத்திற்கு குவியும் சிறந்த விமர்சனங்கள்.. Cineulagam

மரணத்தில் சந்தேகம்! கணவரை காப்பாற்ற மீனா ஏன் முயற்சிக்கவில்லை? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர் News Lankasri

விஜய் டிவி ராமர் இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்....இது தெரியாம போச்சே? Manithan

தாய் தந்தையுடன் சேர்ந்து 5 வயது தம்பியை கொலை செய்த சிறுவனின் புகைப்பட அடையாளம் வெளியீடு! News Lankasri

மீனாவுக்கு அவரின் கணவர் கொடுத்த முதல் பரிசு என்ன தெரியுமா? அசத்திய சாகர்...உடனே ஓகே சொன்ன மீனா Manithan
