அவுஸ்திரேலியாவில் அவசரகாலநிலை பிரகடனம்
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ தொடரும் அபாயம்
அத்துடன் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள் காட்டுத்தீ காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விக்டோரியா மாநிலத்திற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏராளமான மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ இன்னும் பல நாட்களுக்கு தொடரும் அபாயம் இருப்பதாக வானிலை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.