கோவிட் தடுப்பு சிறப்பு குழு எடுத்துள்ள முக்கிய முடிவுகள்!
இலங்கையில் அமுலில் இருந்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை உண்ணிப்பாக அவதானிக்க வேண்டும் என்று கோவிட் தடுப்பு சிறப்பு குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் மக்கள் கூடினால் மீண்டும் கோவிட் தொற்றுநோய் பரவுவதை தடுக்க வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) வலியுறுத்தியுள்ளார்.
காணொளி தொழில்நுட்பம் மூலம் இன்று காலை நடைபெற்ற கோவிட் தடுப்பு சிறப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரச மற்றும் தனியார் துறை பணியாளர்களை பணிக்கு அழைப்பது, போக்குவரத்து விடயங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தொடர்புடைய சுற்றறிக்கைகளுக்கு ஏற்ப முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மொத்த மக்கள்தொகையில் 30 வயதிற்கு மேற்பட்ட சுமார் 95 வீதமானவர்களுக்கு இரு அளவுகளிலும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோவிட் தடுப்பு குழு தடுப்பூசிகளின் விரிவான கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது. சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்க எடுக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும் தொற்றுநோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் மக்களின் வாழ்க்கையை தக்கவைப்பது என்பது குறித்து சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளை தொடர்ந்து ஊடகங்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri