ஏ - 9 வீதியை விரிவாக்கம் செய்ய தீர்மானம்
கண்டி - யாழ்ப்பாணம் வரையிலான ஏ-9 வீதியின் ஒரு பகுதியை விரிவாக்கம் செய்வதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்தல் மற்றும் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், கண்டி - யாழ்ப்பாணம் வீதியின் (ஏ09) 58வது கிலோமீட்டர் தொடக்கம் 63வது கிலோமீட்டர் வரையிலான வீதிப் பகுதியை அகலப்படுத்தி மேம்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திப்பீடு செய்யும் பணி
அதற்கான தேசிய போட்டி விலைமனுக்கோரல் முறை கடைப்பிடிக்கப்பட்டு தற்போதைக்கு அண்மையில் விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தது.
தற்போதைக்கு அதற்காக 8 விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த விலைமனுக்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போதைக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் பின்னர், உயர் மட்ட பெறுகைக் குழு மற்றும் பெறுகை மேன்முறையீட்டுச் சபை ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில், குறைந்தபட்ச விலைமனுதாரரான சம்பந்தப்பட்ட நிர்மாண நிறுவனத்திற்கு 1.070 பில்லியன் ரூபாய் (நிச்சயமற்ற நிதி உள்ளிட்ட மற்றும் பெறுமதி சேர் வரி நீங்கலாக) தொகைக்குக் குறித்த பெறுகையை வழங்குவதற்காகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri