மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு - செய்திகளின் தொகுப்பு
450 சிசி க்கு மேற்பட்ட எஞ்சின் திறன் கொண்ட பத்தாயிரம் உயர் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இதற்காக போக்குவரத்து அமைச்சும் பொது பாதுகாப்பு அமைச்சும் இணைந்து அமைச்சரவை பத்திரத்தை தயாரித்துள்ளதுடன், அது அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சுங்க வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பதிவு செய்யப்படாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இருப்பது தெரியவந்தது.
குற்றச் செயல்களைச் செய்துவிட்டு தப்பிச் செல்லும் மோட்டார் சைக்கிள்களைத் துரத்துவதற்கு அவற்றின் இயந்திரத் திறன் போதாது எனக் கூறி பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள 650 என்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்ய முதலில் பொலிஸார் விரும்பவில்லை.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |