எரிவாயு விலை தொடர்பான இறுதி தீர்மானம்
எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களும் ஒரே விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது தொடர்பான தீர்மானம் இதன்போது எடுக்கப்படவுள்ளது.
நுகர்வோர் உரிமைகளை மீறும் செயற்பாடு
இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டிற்கான உள்நாட்டு எரிவாயு விநியோகம் நுகர்வோர் உரிமைகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது பெரும்பாலான பொருட்களின் விலைகளை குறிப்பிட்ட நிலையான மட்டத்தில் பராமரிக்க முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டிலுள்ள இரண்டு எரிவாயு இறக்குமதி நிறுவனங்களும் தமது விலை திருத்தத்தின் மூலம் நுகர்வோருக்கு பாரிய அநீதி இழைத்துள்ளதாகவும், இரு நிறுவனங்களினதும் உள்நாட்டு எரிவாயுக்கான ஒரே விலைகள் குறித்து எதிர்வரும் வாரத்திற்குள் இறுதித் தீர்மானம் எடுக்கப்படு என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |