ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எடுத்துள்ள முடிவு! செய்திகளின் தொகுப்பு(Video)
உள்ளாட்சிசபைத் தேர்தலில் பொதுக்கூட்டணியின் கீழ் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது ஊடக சந்திப்பு கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
உள்ளாட்சிசபைத் தேர்தலை முன்னிட்டு பரந்தப்பட்ட கூட்டணி அமைக்கப்படும். அவ்வாறு அமையும் கூட்டணிக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தலைமை வகிக்கும்.
அதாவது எமது மொட்டு சின்னத்தின்கீழ் தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு சில இடங்களில் மாற்று கட்சிகளின் சின்னத்தின்கீழ் மொட்டு கட்சி போட்டியிடக்கூடும்.
தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக அறிவிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri