எந்தவித முடிவும் எட்டப்படவில்லை: முன்பள்ளி ஆசிரியர்கள்
முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் எந்தவித ஆக்கப்பூர்வமான முடிவும் எட்டப்படவில்லை என முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியர்கள், கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் முன்பள்ளி ஆசிரியர்களைச் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் வடக்கு மாகாண ஆளுநர் கொழும்பில் நிற்பதனால் அவரின் செயலாளருடன் வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களின் பிரதிநிதிகளுக்கு மிடையிலான சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
எனினும் குறித்த சந்திப்பின் போது எந்தவிதமான ஆக்கப்பூர்வமான முடிவும்
எட்டப்படவில்லை.
எதிர்காலத்தில் தொடர்ச்சியாகப் போராட்டத்தினை
முன்னெடுப்பதன் மூலமே தமக்குரிய தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்'' இவ்வாறு
தெரிவித்துள்ளனர்.



