பயணக்கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்
எதிர்வரும் 31ஆம் திகதியன்று பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் கோவிட் தடுப்பு தேசியக்குழுவுக்கும் இடையில் நாளை சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் ,கடந்த 25ஆம் திகதியன்று பயணத்தடையில் தளர்வை ஏற்படுத்தியபோது பொதுமக்கள் சட்டத்தை மீறி செயற்பட்டமைக் காரணமாக எதிர்வரும் 31ஆம் திகதியும், ஜூன் 4ஆம் திகதியும் தளர்வை அறிவிக்கப்போவதில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பணயத்தடைக்கு மத்தியில் மே25, மே31 மற்றும்
ஜூன் 4ஆம் திகதிகளில் தளர்வுகளை ஏற்படுத்தவும், பயணத்தடையை ஜூன் 7ம் திகதி வரை
முன்னெடுத்துச்செல்லவும் அரசாங்கம் முடிவெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.