இலங்கையில் இருந்து ஜெனிவா நோக்கி பறக்கும் மூன்று கடிதங்கள்! உறுதியான தகவல் வெளியானது

Srilanka Geneva Sampanthan UnitedNation HRCMeeting
By Benat Feb 06, 2022 10:21 AM GMT
Report

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதமொன்றை அனுப்பியுள்ள நிலையில் மேலும் மூன்று கடிதங்கள் தமிழ் அரசியல் மற்றும் சிவில் சமூகங்களிடத்திலிருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தற்போது உறுதியாகியுள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர், வரும் பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில், 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், இலங்கையில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதுடன் அது சார்ந்த விவாதமும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், கடந்த தடவைரூபவ் விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், ஸ்ரீகாந்தா உள்ளிட்டவர்கள் கையொப்பமிட்டு அனுப்பி வைத்த கடிதத்தின் தொடர்ச்சியாக அண்மைக்கால விடயங்களை மையப்படுத்திய கடிதமொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதனைவிட, வடக்கு, கிழக்கினைச் சேர்ந்த தமிழ் சிவில் சமூகங்களின் சார்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதற்கான தயாரிப்பு பணிகளுக்கான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக மெய்நிகரில் இடம்பெற்று வருகின்றது.

இதற்கு அடுத்தபடியாக, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்களின் சார்பில் பிறிதொரு கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதனைவிட, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் கடந்த வருடத்தினைப் போன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், யோகேஸ்வரன், சரவணபவன், சிறிநேசன் போன்றவர்கள் பக்கத்திலிருந்தும் கடிதங்கள் செல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் மேற்படி இரு தரப்புக்கள் அவற்றை இச்செய்தி வெளியாகும் வரையில் உறுதி செய்திருக்கவில்லை.

அதேநேரம், சிவில் தரப்பிடமிருந்தும் பிறிதொரு கடிதம் ஜெனிவாவுக்குச் செல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால் அப்பணியில் ஈடுபடப்போகும் அமைப்புக்கள் மற்றும் பெயர் விபரங்கள் தற்போது வரையில் வெளியிடப்படவில்லை.  

-வீரகேசரி-

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US