மனசாட்சியே முக்கியம் ! அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் நாளை முடிவு! கம்மன்பில
அமைச்சுப் பதவி பறிக்கபட்டதனால் நான் கவலை அடையவில்லை, எனக்கு அமைச்சுப் பதவியைவிட, மனச்சாட்சியே முக்கியம். அதற்கு எதிராகச் செயற்படமுடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அமைச்சுப் பதவி என்பது நிரந்தமற்றதொன்றென நான் இதற்கு முன்னரே குறிப்பிட்டுள்ளேன். பதவிகள் வரும்போகும். ஆனால், மனச்சாட்சி அப்படி அல்ல. மனச்சாட்சியின் பிரகாரமே நாம் செயற்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்,
எல்லா விடயங்களையும் வெளிப்படுத்தினோம். ஆனால், நாம் இங்கும் பொய்யுரைக்கவில்லை. உண்மையை கூறினால் வலிப்பவர்கள்தான் எம்மை விரட்டியுள்ளனர்.
நாம் மக்களின் மடியில்தான் விழுவோம், மக்களுடன் இணைந்து தாய் நாட்டுக்காகப் போராடுவோம். அடுத்தகட்ட நடவடிக்கைகள்
தொடர்பில் நாளை முடிவெடுக்கப்படும் என்றார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 1 மணி நேரம் முன்
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri