சுதந்திரக் கட்சி தொடர்பில் முடிவை எடுங்கள்:வலியுறுத்தும் பொதுஜன பெரமுனவின் இளம் எம்.பிக்கள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவதா இல்லை என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் (Piramitha Bandara Thennakoon) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைமையகத்தில் இன்று ஏற்பாடு செய்து இருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
குடும்பம் ஒன்றில் கூட இப்படியான பிரச்சினைகளுடன் முன்நோக்கி செல்ல முடியாது. நிலையான அரசியல் முகாமாக இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இது சம்பந்தமாக கடும் முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri