கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடனான பேச்சுவார்த்தை தாமதம்-மத்திய வங்கியின் ஆளுநர்
இலங்கைக்கு கடனை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு சம்பந்தமாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது தாமதமாகியுள்ளதால், டிசம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.
தற்போதைய நிலைமையை முகாமைத்துவம் செய்யலாம்
கடன் உரிமையாளர்களிடம் நிதி சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது. தற்போது காணப்படும் நிலைமையை முகாமைத்துவம் செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.
இலங்கை வர்த்தக சபை அண்மையில் கொழும்பில் நடத்திய 2022 பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நந்தலால் வீரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.