இலங்கை கடன் மறுசீரமைப்பில் சீனா வழங்கவுள்ள உதவி
இலங்கையின் மிகப் பெரிய இருதரப்புக் கடன் கொடுனரான சீனா, சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வுக்கு முன்னர் இலங்கைக்கு கடன் மறுசீரமைப்பில் உதவும் என்று பீடிஐ தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள், வெளி மற்றும் உள் கடன்களான 41 பில்லியன் டொலர்களை மறுசீரமைப்பதற்கான சவால் எதிர்கொள்ளப்படும் நிலையில் சீனா இலங்கைக்கு உதவ உள்ளதாக பீடிஐ குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு மில்லியன் டொலர்கள்
2.9 பில்லியன் டொலர்களில் இலங்கைக்கு அடுத்தக்கட்ட நிதியுதவியை
வழங்குவதற்காக, இந்த ஆண்டு செப்டம்பர் 11 முதல் 19 வரையான காலத்தில் சர்வதேச
நாணய நிதியம் அதன் முதல் மதிப்பாய்வை நடத்த உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வுக்கான நிபந்தனையை பூர்த்தி செய்ய இலங்கை தற்போது அதன் வெளி கடனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் ஜூன் மாத இறுதி வரை நிகழ்ச்சித் திட்டத்தின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, முதல் மதிப்பாய்வில் நிர்வாகக் குழு மற்றும் பணியாளர்கள் இருவராலும் அங்கீகரிக்கப்பட்டால், இலங்கைக்கு சுமார் 338 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்றும் பீடிஐ தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam