நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சாதகமான தகவலை வழங்கியுள்ள நிதி இராஜாங்க அமைச்சர்
இலங்கை இரண்டாவது காலாண்டில் கடன் மறுசீரமைப்பு சிக்கல்களை தீர்க்க முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக ப்ளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது .
இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வெளி கடனாளிகள் அனைவரும் சாதகமாக செயற்படுவதால் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து நிதியுதவி பெற முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்
இலங்கையின் பத்திரப்பதிவுதாரர்களுடன் லண்டனில் இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்களின் "சாதகமான முடிவை எதிர்பார்ப்பதாக செஹான் சேமசிங்க, தெற்கு சீன மாகாணமான ஹைனானில் வைத்து தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் பெய்ஜிங்கில் பிரதமர் தினேஸ் குணவர்தனவுடன் நடைபெற்ற "மிகவும் ஆக்கப்பூர்வமான இருதரப்பு கலந்துரையாடலின் போது" இலங்கைக்கும் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கிக்கும் மற்றும் சீனாவின் அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த சீனத் தலைவர் ஸி ஜின்பிங் உறுதியளித்ததாகவும் சேமசிங்க கூறியுள்ளார்.
இலங்கை கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 337 மில்லியன் டொலர்களுக்கான ஆரம்ப அனுமதியைப் பெற்றுள்ளது.
கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை
இருப்பினும் கடன் மறுசீரமைப்பில் அதிக முன்னேற்றம் என்பது இந்த நிதியை பெற்றுக்கொள்வதற்கு முக்கியதான ஒன்றாக அமைந்துள்ளது. இதன்படி சீனாவின் எக்ஸிம் வங்கியுடனான ஆரம்ப கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் சீன அபிவிருத்தி வங்கியுடன் கொள்கை ரீதியான ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் 2022 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் வரலாற்றுக் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் தேசத்திற்கு உதவிய சீர்திருத்தங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சட்டத்தை இலங்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சேமசிங்க கூறியுள்ளார்.
மேலும், இவை இலங்கையின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும் மற்றும் அனைத்து கடன் வழங்கும் நாடுகளிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |