பால்டிமோர் பாலத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்
அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் அமைந்துள்ள பால்டிமோர் பிரான்ஸிஸ் ஸ்கொட் கீ பாலத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூர் கொடியுடன் 27 நாட்கள் கடல் பயணமாக இலங்கையின் கொழும்பு நோக்கி புறப்பட்ட கப்பல், துறைமுகத்தை விட்டு கிளம்பிய 20 முதல் 30 நொடிகளிலேயே அதன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இடிபாடுகளை அகற்றும் பணி
பாலத்தின் இடிபாடுகளின் இரும்பு பகுதிகளை அகற்றுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான கிரேன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் சடலங்களை தேடிக் கண்டு பிடிப்பதற்கு முன்னதாக இந்த இடிபாடுகள் அகற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஆயிரம் தொன் எடையை தூக்கக் கூடிய கிரேன்கள் காணப்பட்டாலும், பாலத்தின் எடையானது நான்காயிரம் தொன் எனத் கூறப்படுகின்றது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பாலத்தை மீளுருக்குவதற்காக அடிப்படை உதவியாக 60 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்வதாக பைடன் அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |