உலகையே உலுக்கிய இலங்கை வந்த கப்பல் விபத்து: நேரில் செல்லவுள்ள ஜோ பைடன் - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்காவில் கப்பல் மோதி பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச அடுத்த வாரம் பால்டிமோர் செல்ல உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, குப்பைகளை அகற்றுவதற்காக கிழக்கு அமெரிக்க கடற்கரையில் உள்ள மிகப்பெரிய கிரேன் பால்டிமோர் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, இந்த கிரேன் மூலம் உரிய குப்பைகள் கொண்டு செல்லப்படுகிறது. நாட்டின் பரபரப்பான துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், பாலத்தை மீட்டெடுக்க 60 மில்லியன் டொலர் அவசர நிதி மத்திய அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |