களனி பௌத்த மையம் தொடர்பில் நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம்
களனியில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த பயிற்சி மையத்திற்கு அண்மையில் தாம் சென்றது குறித்து பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க (Mahinda Jayasinghe) விளக்கமளித்துள்ளார்.
இன்று (20) நாடாளுமன்றத்தில் இது குறித்து விளக்கமளித்தபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவின் (Dayasiri Jayasekara) குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க துணை அமைச்சர் ஜெயசிங்கவுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது இந்த வாக்குவாதம் ஆரம்பமானது.
விசாரணை
எனினும் பிரதியமைச்சரின் பெயரை தாம் குறிப்பிடாதபோது ஏன் அவர் பதிலளிக்க வேண்டும் என்று ஜெயசேகர கேள்வியெழுப்பினார்.
இந்தநிலையில், சில நிமிடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமாதானம் ஆனார்கள்.
இதேவேளை பயிற்சி மையம் கட்டப்பட்டு வரும் நிலத்தின் ஒரு பகுதியை ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதி அபகரித்து விட்டதாகவும், அது குறித்து விசாரிக்க குற்றப்புலனாய்வுத்துறையிடம் கோரியுள்ளதாகவும் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |