ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மரணங்கள் அதிகரிக்கலாம் - சுகாதார துறையினர் எச்சரிக்கை
கொரோனா தொற்றாளர்கள் துரிதமாக அதிகரித்து வரும் நிலையில் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலைமை தடுப்பதற்காக மக்கள் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
நோய் தொற்று ஏற்பட்டு மூன்று வாரங்களின் பின்னர் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், வைத்தியசாலைகளில் மேலும் கொரோனா சிகிச்சை விடுதிகளை பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
