ரஷ்யா - உக்ரைன் போரில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை: வெளியான திகிலூட்டும் தகவல்
ரஷ்ய-உக்ரைன் போரில் இதுவரை இறந்தோரின் எண்ணிக்கை தொகை வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், இரு தரப்பிலும் சேர்ந்து இதுவரை சுமார் 18 முதல் 20 லட்சம் வீரர்கள் உயிரிழந்து அல்லது காயமடைந்து இருக்கலாம் என்று ஆய்வு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வெளியான தகவல்
இதில் ரஷ்ய தரப்பில் சுமார் 12 லட்சம் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 3,25,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நாடு சந்தித்த மிகப்பெரிய உயிரிழப்பு இதுவாக பார்க்கப்படுகிறது.

அதேபோன்று, உக்ரைய்ன் தரப்பில் சுமார் 5 முதல் 6 லட்சம் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,00,000 முதல் 1,40,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, 2025ஆம் ஆண்டில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 12,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாரிய உயிர்ச் சேதங்கள் ஏற்பட்ட போதிலும், ரஷ்ய படைகள் மிக மெதுவாக தமது இலக்கை நோக்கி முன்னேறி வருவதாக அமெரிக்காவின் CSIS ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri