பிரபல நடிகைக்கு கொலை அச்சுறுத்தல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா சமன்மலி குமாரசிங்கவிற்கு(Geetha Kumarasinghe) கொலை அச்சுறுத்தல் விடுத்த நபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
தொட்டகனத்தை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கத்போவ ஊருகஸ்மங் ஹந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடன் பணத்தை வழங்காதது சம்பந்தமாக சந்தேக நபர், கீதா குமாரசிங்கவின் ஹம்புருகல பிரதேசத்தில் உள்ள வீட்டிக்கு சென்று, அவரை அச்சுறுத்தி, கொலை செய்ய போவதாக மிரட்டியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதியின்றி உட்பிரவேசித்து திட்டி, கொலை அச்சுறுத்தல் விடுத்தமை சம்பந்தமாக சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கீதா குமாரசிங்க, சிங்கள த திரைப்படத்துறையின் சிரேஷ்ட பிரபலமான நடிகை என்பதுடன் தமிழ் திரைப்படங்கள் சிலவற்றிலும் அவர் நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மோகன புன்னகை திரைப்படத்தில் கீதா குமாரசிங்க நடித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 4 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam