மனைவியை இரும்பு கம்பியால் தாக்கியவருக்கு மரண தண்டனை
தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஊவா மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் இன்று மரண தண்டனை விதித்துள்ளார்.
பதுளை, கெந்தகொல்ல கிராமத்தில் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி திஸாநாயக்க முதியன்சேலாகே சந்திரவதி (35) என்பவரை படுகொலை செய்தமைக்காக அவரது கணவர் சுலைமான் தர்மதாசவிற்கு எதிராக பதுளை பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த விசாரணையின் போது இருவருக்கும் இடையில் சில காலமாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாகவும், மனைவிக்கு வேறு தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மரண தண்டனை
இதனையடுத்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மனைவியின் காலில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி அரச தரப்பு நிரூபித்திருப்பதால், அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 22 மணி நேரம் முன்

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
