திரைப்பட பாணியில் மிளகாய் தூள் தூவி, வயோதிபர் கொலை! (Photos)
திவுலப்பிட்டியில் வீட்டில் தனியாக வசித்து வந்த வயோதிபரை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேற்படி சந்தேக நபர்கள் கொலை செய்யப்பட்டவரின் அயல் வீட்டில் வசிப்பதற்காக வந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
துனகஹா கிழக்கு - பள்ளியப்பிட்டியவைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது மனைவி உயிரிழந்த பின்னர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அயல் வீட்டில் வசிப்பவர்கள் தமக்கு இடையூறாக இருப்பதாக அவர் தெரிவித்ததை அடுத்து, இரு தரப்பினருக்கு ஏற்பட்ட தகராறில் குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த நபர் கொல்லப்பட்ட பின்னர், அவரின் சடலத்தின் மீது மிளகாய் தூள் பூசப்பட்டிருந்ததாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
மேலும் சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர்களின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இலங்கையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள், காவல்துறை சுற்றிவளைப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்கும் குற்றப் பார்வை இதோ...



